‘கெட்டவன் எங்கிருந்தாலும் வெளியே தள்ளுவேன்!’ - தெற்காசியாவின் மிகப்பெரிய மீன்பிடித்துறைமுக திறப்பு விழாவில் ஜனாதிபதி
கெட்டவன் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் அவனுடைய தகுதியைப் பார்க்காமல் தண்டனை வழங்குவதற்கு ஒருபோதும் பின்நிற்பதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறினார். தெற்காசியாவின் 850 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகத்தை வத்தளை திக்கோவிட்டவில் இன்று (18) திறந்து, மக்கள் மயப்படுத்தியதைத் தொடர்ந்து, அங்கு ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.
தற்போதைய அரசு அரசாங்க யாப்புச் சட்டதிட்டங்களுக்கேற்பவே இயங்குகின்றது. அதனால், நாட்டின் சட்டத்தை மதிக்கும் அதேநேரம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் என்றும் கூறினார்.
பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு உதவிக்கரம் நீட்டியதைப் போலவே, போதைப் பொருள் பாவனையிலிருந்து இளம் சமுதாயத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். இதற்காக எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெளிவுறுத்தினார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment