(கலைமகன் பைரூஸ்) நேற்றிரவு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய களனிப் பிரதேச சபை உறுப்பினர் ஹசித்த மடவளையின் கொலை சம்பந்தமாக தான் கவலையுறுவதாக இலங்கை சுதந்திரக் கட்சியின் களனித் தொகுதி அமைப்பாளரும் மக்கள் தொடர்பாடல் அமைச்சருமான அமைச்சர் மர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மந்திரியின் கொலை தொடர்பாக பொலிஸ் மாஅதிபர் தற்போது விசேட விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட கமிட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும், அந்த விசாரணைகளை மேற்கொள்ள தாமும் பங்களிப்பு நல்குவதாகவும் குறிப்பிடுகின்ற அமைச்சர் மர்வின் சில்வா களனித் தொகுதி அமைப்பாளராக இருக்கின்ற தமது பொறுப்பாகவும் அது உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி மேலதிக கருத்துக்களை முன்வைக்கின்ற களனிப் பிரதேச சபை உறுப்பினர் விஜித குமார குறிப்பிடுகையில், பிரதேச சபை உறுப்பினர் ஹசித்த மடவளை அமைச்சர் மர்வினின் 1,700 இலட்சம் ரூபா இலஞ்சம் சம்பந்தமான விடயங்களை அறிந்திருந்திருந்ததாகவும், விசாரணைகள் முடிவடையும் வரையேனும் களனி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்றும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
பிரதேச சபை உறுப்பினர் ஹசித்த மடவளை, நேற்றிரவு முகமூடி தரித்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் வீட்டிற்கு முன்பாக வைத்து துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment