Monday, January 14, 2013

படுத்தும் சரியாகத் தூக்கம் வரவில்லையா ! என்ன? செய்யலாம்

படுத்ததும் தூக்கம் வருவது என்பது அது ஒரு வரம் தான். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியமில்லை.சிலருக்கு படுத்து நீண்ட நேரத்திற்குப்பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் கெளண்டிங் ஷிலீப் செய்வதுண்டு.அதாவது எளிதில் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100.... 200..... 300 வரை எண்ணத்துவங்குவார்கள். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை.

இப்படி எண்ணுவதற்கு கெளண்டிங் ஷிலீப் என்று பெயர். இங்கிலாந்துகாரர்களுக்கு தூக்கம் பிடிப்பதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆகிறது இது குறித்த ஒரு ஆய்வு.

அதற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்களாம். இந்த மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம்.

சுவாரசியமாக இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.

உதாரணமாக கிரீச்சிடும் பறவைகளின் ஒலிகள்இ மெல்லிய காற்றின் இரைச்சல்இ நீரோடையின் சலசலப்பு இபோன்றவை தூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுபவையாக இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வு.

இவற்றுக்கெல்லாம் மேலாக இருக்கவே இருக்கிறது பழமையான ஒரு முறை. அது தான் புத்தகம் படிப்பது. இதுவும் தூக்கத்தை வரவழைக்கிற விஷயங்களில் முக்கியமானது தான்.

துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிபோகிறவர்களும் இருக்கிறார்கள். விசித்திரமாக கடிகாரத்தின் டிக் டிக் ஒசைஇ சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம்இ வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் சப்தமும் தூக்கத்தை வரவழைக்கும் விஷயங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன.

இவையத்தனைக்கும் வில்லனாக இருப்பது பக்கத்தில் தூங்குபவரின் குறட்டை சத்தம் என்று ஆத்திரப்படுகிறார்கள் உண்மையில் பாதிப்புக்குள்ளானவர்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com