யாழ்.பல்கலைக்கழகத்திற்கான மாணவர் வருகை வீழ்ச்சி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பித்துள்ள நிலையில், விரிவுரைகளுக்கு மிகக்குறைந்தளவு மாணவர்களே வருகை தந்துள்ளதாகத் தெரியவருகின்றது.இரண்டு மாதங்களின் பின்னர் பல்கலைக்கழக நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்ப்பட்டன.
பல்கலைக்கழகத்தின் வர்த்தக இளமானி வகுப்புக்கான விரிவுரைகள் மாத்திரமே இன்றைய தினம் இடம்பெற்றன.
ஏனைய வகுப்புகளுக்கான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்து, சில மணி நேரங்களின் பின்னர் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டு அவர்கள் வந்து சேர்வதற்கான கால அவகாசம் குறைவாகவே காணப்பட்டதாகவும் அதனாலேயே மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதாகவும் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment