கொழும்பு நகரின் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் சிங்களவரே அதிகம்!
கொழும்பு நகரில் வசிக்கும் மக்களில் அதிகளவானவர்கள், சிங்களவர்கள் என்ற போதிலும் கொழும்பில் 24 சதவீதமான சிங்களவர்களே வசிப்பதாக வெளியான செய்திகள் தவறானவை என இலங்கை புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் 2012 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைய கொழும்பில் 36. 8 வீதமான சிங்களவர்களும், 31.8 வீதமான தமிழர்களும், 29 வீதமான இலங்கை சோனகர்களும் வசித்து வருகின்றனர் என திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரில் 24 வீதமான சிங்களவர்களும், 33 வீதமான தமிழர்களும், 40 வீதமான முஸ்லிம்களும் வசித்து வருவதாக முன்னர் வெளியான செய்தி தவறானது எனவும் ஏற்கனவே வெளியான புள்ளி விபரம் 1971 ஆம் மற்றும் 1981 ஆம் ஆண்டுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அமைவாக வெளியிடப்பட்ட தகவல் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் 2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைய கொழும்பு நகரில் உள்ள சிங்களவர்களின் எண்ணிக்கை 36.8 வீதமான என இலங்கை புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment