ஐயோ நான் கொலை செய்யவே இல்லை என்கிறார் மர்வின்!
(கலைமகன் பைரூஸ்)களனிப் பிரதேச சபை உறுப்பினர் ஹஸித்த மடவளையின் கொலை தொடர்பாகத் தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அதனைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் கலாநிதி மர்வின் சில்வா குறிப்பிடுகிறார்.
இதற்கு முன்னரும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தமக்கெதிராக எழுந்ததாகவும், அதில் எந்த ஒன்றிலும் தான் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
தன்மீது சாட்டப்படுகின்ற எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் தான் ஒருபோதும் தடுமாற்றமடைய மாட்டேன் என்றும், தான் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் தன்னைச் சூழ்ந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பெரியதொரு ஊர்வலத்தை நடாத்தி முடிந்த இவ்வேளை தன்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்க தமக்கு நேரமில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்
0 comments :
Post a Comment