Thursday, January 10, 2013

ரிசானாவின் மரணத்திற்கு மகிந்தவே பொறுப்பு, முஸ்லீம் அமைச்சர் சும்மா வந்து தங்கிச் சென்றனர்

'ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் குற்றச்சாட்டு'

ரிசானா நபீக் என்ற அப்பாவி இலங்கைப் பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் புறக்கணித்து வந்தார்கள் என்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. ரிசானா நபீக்கின் உயிரைக் காப்பாற்றத் தவறியதற்கான முழுமையான பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஏற்க வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிர்வாக இயக்குனரான பஷில் பெர்ணாண்டோ இது தொடர்பில் தெரிவிக்கையில்,


இந்த வழக்கு குறித்து மேன்முறையீடு செய்வதற்கான நிதியை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வரவில்லை

கொலை செய்ததாகக் கூறப்படும் குழந்தையின் பெற்றோரை நேரடியாகச் சந்தித்து அவர்களிடம் ரிசானா நபீக் சார்பில் மன்னிப்பு பெற இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது.

அந்தக் குடும்பத்தோடு நேரடியாகப் பேசி அவர்களை சமரசம் செய்திருந்தால் மாத்திரமே ரிசானாவை காப்பாற்றியிருக்க முடியும் என்ற நிலை இருந்த வேளையில், இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் எல்லாம் சவுதிக்கு சும்மா வந்து தங்கிவிட்டுப் போனார்களே ஒழிய, இறந்த குழந்தையின் பெற்றோர்களுடன் அவர்கள் நேரடியாக பேசவில்லை.

சர்வதேச மட்டத்தில் இந்த விடயத்தில் உருவாகியிருந்த ஒரு சாதகமான நிலையையும் இலங்கை அரசாங்கம் பயன்படுத்தத்தவறிவிட்டது என்றார்.

1 comments :

Anonymous ,  January 10, 2013 at 7:16 AM  

Srilankan muslims have more responsiblities to find out the truth
of Rizan's punishment.This is really an unforgettable saddest event in the history of Srilanka.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com