கடற்சுழியில் சிக்கி இளைஞரைக் காணவில்லை நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சமயம் சம்பவம்
வலிகாமம் வடக்கு சேந்தான்குளம் கடற்பகுதிக்குக் நண்பனுடன் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் கடற்சுழியில் அகப்பட்டுக் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம் பெற்றுள்ளது. ஆட்கள் நடமாட்டம் அற்ற கடற்பகுதியில் இந்த இரு இளைஞர்களும் கடலில் இறங்கி நீராடியுள்ளனர். இதனை அந்தப் பகுதி கடற்தொழிலாளி ஒருவர் அவதானித்துள்ளார்.
இதனை அவதானித்த கடற்தொழிலாளி உடனடியாக கடலில் இறங்கி தத்தளித்த இளைஞர்களை மீட்க முட்பட்ட போதிலும் ஒரு இளைஞர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளார். மற்றவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
மீட்கப்பட்டவர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணாமல் போனவர் மாசியப்பிட்டியைச் சேர்ந்த எஸ். உமாகரன் என தெரியவந்துள்ளது. தற்போது குறிப்பிட்ட இளைஞரின் சடலத்தை தேடும் முயற்சியில் கடற்தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்..
0 comments :
Post a Comment