இலங்கையின் பல பாகங்களில் கறுப்புமழை
எல்லோராலும் பெரிதும் பேசப்பட்டதும் இணைய உலககை கலக்கிய மாயன் நாட்காட்டி முடியும் திகதியில் உலகம் அழியும் என வதந்திகள் கிளம்பிய நாள்முதல் இலங்கையில் இயற்கையின் சீற்றம் அதிகரித்திருப்பதுடன் அங்காங்கே கடந்த காலத்தில் மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களிலும் மீன், இறால், முதலை போன்ற விலங்குகள் வடிவிலும் மழை பெய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தது இந்த ஆச்சர்யம் நீங்க முதல் நேறறு ஊவா மாகாணத்தின் உடுதும்பர, கோவில்மடு, ஹப்புகஸ்கும்புர மற்றும் லுணுகலை ஆகிய பகுதிகளில் கருப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இதனால் வெயிலில் உலர வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற ஆடைகளில் கருப்பு கரை காணப்பட்டதாக மக்கள் தெரிவித்ததுடன் இந்த மழை நீரை பொதுமக்கள் சேமித்து வைத்துள்ளனர்.
0 comments :
Post a Comment