(கலைமகன் பைரூஸ்)குற்றப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் எமது கட்சி அதற்கு ஆதரவாக வாக்களிக்கமல் இருப்பதற்கு முடிவுசெய்துள்ளதாக இலங்கை கம்பியூனிஸ்ட் கட்சி செயலாளரும், அமைச்சருமான டீ.வீ. குணசேக்கர தெரிவிக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தினால் குற்றப் பிரேணை சம்பந்தமாகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு சம்பந்தமாக தமது கட்சி, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரன ஆகியோருடன் மேலும் கலந்தாலோசித்து நேற்று (06) பொதுத் தீர்வொன்றுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் மேலாண்மை உடையதல்ல என்று கூறவில்லை என்றும் குற்றப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட மாட்டாது என்றும் சட்ட மூலமொன்றின் பின்னரே குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டுமென்பதுமே தங்களது கருத்து என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment