மன்னாரில் மேலும் ஒரு ஊடகவியலாளருக்கு சியாத் இயக்கம் மிரட்டல் கடிதம்
சியாத் இயக்கத்தினால் மன்னார் மாவட்டத்தில் மேலும் ஒரு ஊடகவியலாளர் மிரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சியாத் இயக்கம் என்னும் பெயரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கலான எஸ்.ஆர்.லெம்பேட், ஏ.ரி.மார்க், என்.ஜே.பெலிஸ்டஸ் பச்சைக் ஆகிய மூன்று ஊடகவியலாளர்களுக்கும் மிரட்டல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மேலும் ஒரு ஊடகவியலாளருக்கு நேற்று முன்தினம் குறித்த சியாத் இயக்கம் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஊடகவியலாளர்களை மிரட்டும் இச்செயற்பாடுகளுக்கு பத்திரிக்கையாளர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment