சுதந்திரக்கட்சியின் களனி தொகுதி வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு - மேர்வினுக்கு நெருங்கும் ஆப்பு?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் களனி தொகுதி கிளையின் பேலியகொடை அலுவலகத்திலிருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிpவித்துள்ளனர். மேல் மாகாண வட பிரிவு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து களனி பொலிஸ் பிரிவில் உள்ள 468/01 நுன்னன்கொட வீட்டில் சோதனை நடாத்தப்பட்டபோதே இவை மீட்கப்பட்டதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் இருந்து இரு வாள்கள் மற்றும் ஒரு கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இவற்றின் போது குறித்த வீட்டில் இருந்த பெண்ணொருவரும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மேர்வின் சில்வாவின் அமைப்பாளர் பதவிக்கு ஆப்பு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment