அப்பாறையில் பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை?
மரண வீடொன்றுக்கு சென்று திரும்பிய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியானது எவ்வாறு? என்பது தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அம்பாறை, மாஹஓய பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது அவர்; தற்கொலை செய்துக்கொண்டாரா? என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
0 comments :
Post a Comment