Friday, January 18, 2013

பரீட்சை வினாத்தாள்கள் வெளியாவதை தடுப்பதற்கு புதிய திட்டங்களாம்!

வினாப்பத்திரங்களின் ரகசிய தன்மையை பாதுகாக்கும் பொருட்டு, வினாத்தாள் அச்சிடும்போது, டிஜிட்டல் முறையை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் சுயாதீனத் தொலைக்காட்சிக்கு தெரிவிக்கையில் : பரீட்சைகள் திணைக்களத்தின் அச்சக பகுதியை நவீனமயப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். தற்போது எமது அச்சக பகுதியில், அதிகளவான தொழிலாளர்கள் பணிபுரிக்கின்றனர். உலகின் பல நாடுகளில், டிஜிட்டல் முறைமையிலேயே, வினாப்பத்திரங்கள் அச்சிடப்படுகின்றன. இதன்மூலம், இரகசிய தன்மை பாதுகாக்கப்படுகிறது. சிங்கப்பூர், நோர்வே உள்ளிட்ட நாடுகள், இம்முறையை பின்பற்றுகின்றன. டிஜிட்டல் முறையின் மூலம் இரண்டு பேரின் துணையுடன் வினாத்தாள்களை அச்சிட முடியுமென, நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். ஆகவே இந்த முறையை பின்பற்ற நாங்கள் ஏற்பாடுகளை செய்துள்ளோம். அத்துடன் நவீன கெமராக்களை பொருத்துவதற்கும், நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் வினாத்தாளை அச்சிட்ட உடனேயே, பிரதேச கிளைகள் மூலம் அவற்றை விநியோகிப்பதற்கும், நாங்கள் தீர்மானித்துள்ளோம். அடுத்த சில வருடங்களில் மேலும் பல பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். அவ்வாறு பிரச்சினைகள் தோன்றுவதற்கு மன்னர், தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment