Saturday, January 12, 2013

இலங்கையின் சட்டம், அரசியல் பாதிக்கப்பட்டுள்ளது-சர்வதேச ஜுரிகள் சபை

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக குற்றவியல் பிரேரணை தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை நாட்டின் உச்ச மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்களை உதாசீனம் செய்யும் வகையில் அமைந்துள்ளதென சர்வதேச ஜுரிகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மிக குறுகிய கால அரசியல் நலன்களுக்காக ஒட்டுமொத்த நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கும் களங்கம் ஏற்படும் வகையில் இலங்கையில் நடைபெறும் நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கா மீதான குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் சட்ட மற்றும் அரசியல் சாசனங்களில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதென சர்வதேச ஜுரிகள் சபை குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக குற்றவியல் பிரேரணை விவகாரம் சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைய நடைபெறவில்லை என சர்வதேச ஜுரிகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

No comments:

Post a Comment