Wednesday, January 23, 2013

திருமண வீட்டிற்கு சென்றவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த ஹன்டர் வாகனம்-யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பரிதாபச் சம்பவம்

சிறிய ரக ஹன்டர் ரக வாகனம் ஒன்றும் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த மூச்சக்கர வண்டியென்றும் விபத்திற்குள்ளானதில் மூச்சக்கரவண்டியின் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மருதனார் மடச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியின் சாரதி சின்னத்தம்பி நாகராசா (வயது 36), செல்லமணி புஸ்பலீலா (வயது 46), உதயகுமார் ரூக்மணி தேவி (வயது 43) ஆகிய மூவருமே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comments :

Anonymous ,  January 23, 2013 at 7:20 PM  

It is a very narrow junction,there is no proper traffic system the vechicles disorderly just fly as they want.The junction should be broadened traffic lights should be installed or police traffice officer must control the traffic at Maruthanamadam,in case if you want to avoid further tragedies.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com