இஸ்ரேலின் தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிகுட் கட்சி மீண்டும் வெற்றி
இஸ்ரேலில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிகுட் கட்சி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. ஆயினும் பெருன்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பதற்கு பெஞ்சமினுக்கு இத்தேர்தல் வழிசமைக்கவில்லை. அந்நாட்டு பாராளுமன்றத்தின் 120 மொத்த ஆசனங்களில் 31 ஐ நேதன்யாகு தலைமையிலான கட்சி வெற்றிபெற்றுள்ளது..
இதுதவிர யேஸ் அடிட் கட்சி 19 ஆசனங்களையும், இடது சாரி தொழிலாளர் கட்சி 15 ஆசனங்களையும் வென்றுள்ளன. ஆயினும் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிகுட் கட்சியால் பெரும்பான்மை பலத்தை தேர்தலில் பெறமுடியவில்லை.
எனவே ஆட்சி அமைக்க லிகுட் கட்சி, யாயிர் லெபிட் தலைமையிலான யேஸ் அடிட் கட்சியின் உதவி தேவைப்படுகின்றது. இதனால் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையில் கூட்டணி அமையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தேர்தலில் கட்சிகள் பெற்ற ஆசனங்கள் வருமாறு.
Likud-Yisrael Beiteinu: 31
Yesh Atid: 19
Labor: 15
Shas: 11
Habayit Hayehudi: 11
United Torah Judaism: 7
Hatnua: 6
Meretz: 6
United Arab List-Taal: 5
Hadash: 4
Balad: 3
Kadima: 2
.
0 comments :
Post a Comment