Friday, January 4, 2013

அரசாங்கத்தின் முக்கிய தளங்கள் இணையத்தள ஹேக்கர்களால் உருக்குலைப்பு- அரசிற்கும் சவால்

இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான முக்கியமான 22 இணையத்தளங்கள் (subdomains) ) ஹேக்கர்களால் ஹக் செய்யப்பட்டு அரசாங்கத்திற்கும் பகிரங்க சவால் விடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பங்களாதேஷ் கிறிஹெக் ஹேக்கர்கள் மூலம் உருக்குலைய செய்யப்பட்டுள்ளன.

வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான இணையத்தளங்களோடு, பொது சேவை ஆணைக்குழு, விளையாட்டு துறை, வேளாண்மை துறை, சுகாதார உள்ளிட்ட அமைச்சின் தளங்களே (subdomains) இவ்வாறு உருக்குலைய செய்யப்பட்டள்ளன.

இணையத்தளங்களை உருக்குலைய செய்யமுடியாது என்று விடுக்கப்பட்ட சவாலையடுத்தே இந்த இணையத்தளங்களை உருக்குலைய செய்ததாக தெரிவித்துள்ள பங்களாதேஷ் கிறிஹெக் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்

இணையத்தளங்களுக்குள் உள்நுழைய முடியாதவகையில் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளுமாறும் பங்களாதேஷ் கிறிஹெக் ஹேக்கர்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment