Thursday, January 24, 2013

கடந்த வருடத்தில் நாடு முழுவதும் 74000 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாம்.

வடகிழக்கு உட்பட நாடு முழுவதும் கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் வரை 74 ஆயிரம் கிலோ ஹெரோயின் உள்ளிட்ட போதை பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்த தேடுதலின் போதே இவ்வாறு போதை பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றோடு தொடர்புடைய 41 ஆயிரத்து 972 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின், கஞ்ஜா, கொக்கேன், அஷீஸ், மெதம், பெடமி உள்ளிட்ட பலகோடி ரூபா பெறுமதி வாய்ந்த பல்வகையான போதை வஸ்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு, கொழும்பு உட்பட நாடு முழுவதும் விமான நிலைய சுங்க திணைக்கள, கலால் திணைக்கள அதிகாரிகள், மற்றும் சிறைச்சாலைகள், பொலிஸ் போதை பொருள் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிபடையினர் மற்றும் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் போதே இந்தளவு பெருந் தொகை போதை பொருட்கள்; கைப்பற்றப்பட்டுள்ளன.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com