புதிய ஆண்டினை வரவேற்ற 710 பேர் வைத்தியசாலையில்!
திடீர் விபத்து காரணமாக கடந்த 48 மணித்தியாலங்களில் 710 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளதடன் இவர்களில் 204 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ஆரியவங்ச தெரிவித்ததுடன் இந்த வருடம் பண்டிகை காலத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த வருடம் வெளிநோயாளர் பிரிவில் 598 பேர் சிகிச்சைப் பெற்றதாகவும் இவ்வருடம் 498 பேரே சிகிச்சைப் பெற்றுள்ளதாகவும் இதன்மூலம் 17 சதவீத குறைவு ஏற்பட்டுள்ளதுடன் கடந்த வருடம் 219 பேர் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றதாகவும் இவ்வருடம் 204 பேரே தங்கியிருந்து சிகிச்சைப் பெறுவதாகவும் இதன்மூலம் 7 சதவீத வீழ்ச்சி காணப்படுவதாகவும் வைத்தியர் பிரசாத் ஆரியவங்ச குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment