கடந்த வருடத்தில் 71 ஆயிரத்து 458 பேர் இராணுவத்திலிருந்து தப்பியோட்டம் இராணுவம் அறிவிப்பு
இலங்கை இராணுவத்திலிருந்து கடந்த வருடத்தில் மாத்திரம் 33 ஆயிரத்து 532 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று இராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்தது. இவர்கள் அனைவரும் கடமையிலிருந்து தவறினார்கள் மற்றும் அனுமதியின்றி விடுமுறை பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை, கடந்த வருடத்தில் மாத்திரம் 71 ஆயிரத்து 458 பேர் இராணுவத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களை தேடிப்பிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
.
0 comments :
Post a Comment