ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் தரம் ஐந்து புலமைப்பரிசில்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதால் இனி புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை ஏழாயிரமாக அதிகரிக்குமாறு ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுவரை காலமும் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும்போது 15 ஆயிரம் ரூபா புலமைப்பரிசில் தொகை வழங்கப்படுவதற்காக 105 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு தரம் ஐந்து புலமைப் பரிசில் வழங்கும் நடைமுறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொழில் மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment