Wednesday, January 9, 2013

அனுராதபுரத்தில் பள்ளிவாசம் மீது தாக்குதல் - 7 பேர் கொண்ட குழு அட்டகாசம்

அநுராதபுரம் மல்வத்து ஓயாவில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இன்று புதன் கிழமை காலை 2 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் மூழ்கியுள்ள பள்ளிவாசல் மீது ஏறிய இனந்தெரியாத குழுவினர், அதன் முன்பகுதியை தாக்கி சேதப்படுத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பள்ளிவாசல் சேதப்படுத்தப்படும் சத்தம் கேட்டு அயலவர்கள் வந்து பார்க்கையில் அக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னரும் முஸ்லீம்களுக்கு எதிராக பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comments :

Arya ,  January 9, 2013 at 11:36 PM  

Very good , well done , continue until they to run to saudi Arabia.

நாங்கள் எல்லோரும் ரிசானா நபீ ஒரு இலங்கை பெண் என்பதால் மனம் நொந்து அராபியர்களை கண்டிக்றோம்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com