இலங்கையின் இராணுவத்தைச் சேர்ந்த 610 பேர் ஜ.நா அமைதிப் படையில் பணியாற்றவுள்ளனர்
ஜக்கிய நாடுகளின் சமாதானப் படையில் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை இராணுவத்தைத் சேர்ந்த 610 பேருக்கு வாய்ப்பு வழங்க்கப்பட்டுள்ளது. இவர்கள் எதிர்வரம் பெப்ரவரி முதல் வாரத்தில் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர். இந்த குழு, இலங்கையிலிருந்து ஹெய்டி செல்லும் 17ஆவது குழுவாகும்.
இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் இவர்கள் ஆறு மாதகாலம் ஹெய்டியில் பணியாற்றவுள்ளனர்.
இந்த 610பேரில் 49 அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர். இவர்களுக்கான பயிற்சிகள் குக்குலேகங்க இராணுவ முகாமில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment