60,000 மில்லியனில் இலங்கையின் மகுடம்!
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சியை முன்னிட்டு நான்கு மாவட்டங்களின் அபிவிருத்தி வேலை திட்டங்களுக்கு மாத்திரம் 60,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பெப்ரவரி 4 ஆம் திகதி அம்பாறையில் நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சி ஏற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு கடந்த(08.01.2013) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது கண்காட்சி ஏற்பாடுகளுக்கென 270 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்படுவதுடன் ஏனைய பணம் இந்த மாவட்டங்களின் அபிவிருத்திக்கே ஒதுக்கப்பட்டுள்ளது எனவே இந்த நிதி எக்காரணத்தைக் கொண்டும் தேவையற்ற விதத்தில் பயன்படுத்தவோ அல்லது வீணான அலங்காரங்களுக்கோ செலவிடப்படமாட்டாது என குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிடுகையில் இம்முறை அமைச்சுக்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிணைந்த மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு 45 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதேச அபிவிருத்திக் குழுவினால் முன்மொழியப்படும் வேலைத் திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படு செயற்படுத்தப்படுவதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
0 comments :
Post a Comment