பிரபாகரனை பாதுகாத்த 50 ஆயிரம் கண்ணி வெடிகள் மீட்பு.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதியில் மறைந்திருந்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் 50 ஆயிரம் கண்ணி வெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்ணி வெடிகளை அகற்றும் நிறுவனங்களின் பங்களிப்புடன் கண்ணி வெடிகள் அகற்றப்படுகின்றன. இப்பிரதேசத்தில் டேஸ் நிறுவனம் 4 ஆயிரத்து 776 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
இதன் போது எல்ரிரிஈயினால் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டன. நாளொன்றுக்கு 80 வீதமான கண்ணி வெடிகள் அகற்றப்படுகின்றன. சர்வதேச சாசனங்களை மீறும் வகையில் எல்ரிரிஈயினால் இவ்வாறு கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக டேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு காட்டில் சுற்றாடலுக்கு பாதிப்பில்லாமல் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் இடம்பெறுகின்றன என்று சுயாதின தொலைக்காட்சி தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment