பாடசாலை மாணவிக்கு 5000 தண்டம்
சுங்கப்பிரிவினரின் அனுமதியுடன் கொண்டுவரப்பட்ட 12 சிகரெட்டுக்களை வெத்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கையில் கல்விக்கற்று வரும் மாலைத்தீவு மாணவிக்கு கொழும்பு நீதிமன்றம் 5000 ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தது.
மாணவியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி 'இப் பெண் சொந்த பாவனைக்காக தனது பையில் வைத்திருந்த சிகரெட்டுக்களையே பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இவை சட்டவிரோத சிகரெட்டுகள் இல்லை இவர் இலங்கைக்கு வந்தபோது சுங்கப்பிரிவினர் இவரை இரண்டு சிகரெட் பெட்டிகளை எடுத்துவர அனுமதித்தனர்' என வாதிட்டதுடன் இருப்பினும் தனது கட்சிக்காரர் குற்றத்தை ஒப்புகொள்ள தயாராக இருப்பதனால் அவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு அவர் நீதிமன்றில் கேட்டதற்கு இணங்க இவருக்கு நீதவான் 5000 ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.
தீர்பின்பின் கூறிய சட்டத்தரணி சுங்கத்துறை இலங்கைக்கு கொண்டுவர அனுமதித்ததை சட்டம் தவறு என்கிறது அவ்வாறு எனில் நீங்களே பாருங்கள் சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றது அரசு
இவ்வாறுதான் குற்றம் செய்தவர்கள் இலகுவாக தப்பித்து விடுவதுடன் குறிப்பிட்டதுடன் இலங்கையில் சில பொருட்கள் இறக்க தடை என்றால் தடையை சரியாக அமுல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டதுடன் சட்டத்தை பாருங்கள் எந்தப்பெரிய தவறு இந்ததற்கு பதில் கூறப்போவது யார் ஏன் என்றால் நீதித்துறை சட்டவிரோத சிகரெட்டுக்களை வெத்திருப்பது தவறு எனும் போது சுங்கத்துறை தவறு இல்லை என்கிறது நீங்களே பாருங்கள் சட்டத்தின் ஓட்டையை
குறித்த மாணவி கொழும்பு 3 இல் உள்ள பெரிய கடைக்கு அண்மையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment