காஸ் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கும். என்று எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க தெரிவித்தார். காஸ் நிறுவனங்கள் காஸ் விலையை 650 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே இவ் அதிகரிப்பு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும் மக்கள் தங்களுடைய வாழ்க்கையை கொண்டு நடத்தமுடியாத அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
எரிபொருட்கள் மீதான வரியை குறைத்தால் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைத்துக்கொள்ள முடியும். ரூபாவின் பெறுமதியை குறைத்தமையினால் 2005 ஆம் ஆண்டு கடன் சுமை 27,800 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ளது.
2005 ஆம் ஆண்டில் 91 ஆயிரம் ரூபாவாக இருந்த தனிநபர் கடன் 2012 ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment