உலகில் வேலையில்லாதோர் தொகை 4 மில்லியனால் அதிகரிப்பு!!
கடந்த 2012 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வேலையில்லாதோர் தொகை 4 மில்லியனால் அதிகரித்துள்ளதுடன் வேலையில்லாத மொத்த மக்களின் எண்ணிக்கை 197 மில்லியனைத் தொட்டுள்ளது என ஐ.நா இன் தொண்டு ஊழியர் பிரிவு (UN labour agency) இன்று எச்சரித்துள்ளது.மேலும் இத்தொகை இவ்வருடம் இன்னமும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது எனவும் அது கூறியுள்ளது.
இந்நிலையில் ILO எனப்படும் சர்வதேச ஊழியர் நிறுவனம் இது குறித்துத் தகவல் அளிக்கையில் இப்பிரச்சினையினால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்களே என்றும் வேலை இல்லாதவர்களின் மொத்த எண்ணிக்கையில் 13% பேர் 24 வயதுக்குக் குறைந்தவர்கள் என்றும் கூறியுள்ளது. மேலும் பூகோள வேலை வாய்ப்பில்லாதோர் தொகை இவ்வருடம் 5.1 மில்லியனாகவும் 2014 இல் 8.1 மில்லியனாகவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது எனவும் கணிப்பிடப் பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2012 இல் உலகில் வேலை வழங்கப் படும் இடங்களில் வேலை செய்பவர்களுடன் ஒப்பிட்டால் 6% மக்களுக்கு வேலை வழங்க முடியாத சூழ்நிலை நிலவியுள்ளது. ஐரோப்பாவில் மட்டும் வேலையில்லாதவர்களில் 3 வீதம் பேர் ஒரு வருடத்துக்கும் மேலாக இப்பிரச்சினையில் சிக்கியுள்ளனர். மேலும் ஊழியர் சந்தையில் இருந்து 39 மில்லியன் மக்கள் வேலை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
ILO இன் தகவல் படி உலக நாடுகளில் ஜேர்மனி, ஆஸ்ட்ரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளே சிறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக மிகக் குறைந்த வேலையில்லாத இளைஞர்கள் தொகையை உடைய நாடுகள் எனவும் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment