ஸவுதியில் இலங்கையர் உட்பட 45 பேருக்கு மரண தண்டனை
இலங்கையர் உட்பட மொத்தம் 45 பணிப்பெண்கள் ஸவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக ‘பிரிட்டன் கார்டன்’ பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. ஸவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட உள்ளவர்களின் அட்டவணையில் பிலிப்பீனிய, இந்திய, எத்தியோப்பிய பணிப்பெண்களும் அடங்குவதாக அப்பத்திரிகை அறிவித்துள்ளது.
அவர்களில் ஒருவருக்கு எதிராகக்கூட வழக்குத் தொடரப்படவோ, வழக்கறிஞர்களின் உதவி பெறப்படவோ இல்லையென்று ஸவுதி அரேபிய மனித உரிமைகள் தொடர்பான ஆய்வுகள் கூறியிருப்பதாக கார்டியன் செய்திப் பத்திரிகை சுட்டிக் காட்டுகிறது.
பணிவிடை செய்யும் காலப்பகுதியில் அடிக்கடி துன்புறுத்தப்பட்டதாகவும், தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற எஜமானன் ஒருவரை கத்தியினால் குத்திக் கொலை செய்ததாகவும் குறிப்பிடும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பணிப் பெண்ணும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2012 இல் ஸவுதி அரேபியாவில் 69 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அதில் இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நபீக்கும் உள்ளடங்குகிறார்.
ஸவுதியில் பணிபுரியும் இலங்கைப் பணிப்பெண்களின் தொகை மூன்று இலட்சத்து எழுபத்தையாயிரத்திற்கும் அதிகமாகும்.
(கலைமகன் பைரூஸ்)
2 comments :
உண்மையில் ஷரியா சட்டம் என்பது மனிதாபிமானத்திற்கு எதிரான கற்கால சட்டம். ஷரியா சட்டம் என்பது மனிதர் அறிவுரீதியாக நாகரீகம் அடைவதிற்கு முன்னர் மனிதநேயம் அற்ற காட்டு மிராண்டி களினால் பின்பற்றி வந்த கொடுரச்சட்டம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆனால், இவ் நாகரிக, நவீன உலகில் இன்றும் அச் ஷரியா சட்டம் ஒரு சில அரபு நாடுகளில் பின்பற்றப்படுகிறது என்றால், அந்நாடுகளும், ஆட்சியாளர்களும், அந்நாட்டு மக்களும் எப்படிப்பட்டவர்கள் என்பதை எவரும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வுலகில், கற்கால காட்டு மிராண்டி ஷரியா சட்டம் சரியா? உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்.
இந்த செய்தியை பாருங்கோ (http://www.ilankainet.com/2013/01/blog-post_6244.html) அண்மையில் டில்லியில் காமூவர்களால் சூறையாட பட்ட பெண்ணினதும் அச்செய்தியை கேட்டு கருத்து சொன்ன பலபேரும் அக்காமுகர்களை உயிரோடு ஏறிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் .
அதே போன்றுதான் இஸ்லாமிய சரியா சட்டமும் கூறுகிறது கொலைக்கு கொலைதான் என்று.
அதில் என்ன தவறு ரிசானாவுக்கு நடந்த சம்பவத்திற்கு அந்நாட்டு அரசு பொறுப்பே தவிரே இஸ்லாமிய சரியா சட்டம் கிடையாது. இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து இஸ்லாத்தையும் அதன் சட்டங்களையும் தவறாக சித்தரிக்க நினைப்பவர்கள் முதலில் இஸ்லாத்தை படித்து விட்டு இஸ்லாத்தை விமர்சிப்பது நல்லது.
Post a Comment