45 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 5 பேர் கொண்ட குழு பொலிஸாரால் கைது
பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 5 பேர் கொண்ட குழு ஒன்று மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது. 45 வயதான நுகேகொட விஜேராம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் 119 என்ற அவசரசேவை தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment