Sunday, January 13, 2013

சீனாவில் ஒரு மலைக் கிராமத்தை தீடிரென்று காணவில்லை! 42 சடலங்கள் மீட்பு ஆயிரம் இயந்திரங்கள் மீட்புப் பணியில்!

சீனாவில் மலைக்கிராமத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவுக்கு கிராமமே மண்ணுக்குள் புதைந்த பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சீனாவின் தென்மேற்கில் யுன்னான் என்ற மலைப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு கடுமையான மழை பெய்து வருவதால், திடீரென சேறு சகதிகளுடன் மண்சரிவு ஏற்பட்டது.இதனால் மலைக் கிராமமே அடியோடு அடித்து செல்லப்பட்டு மூழ்கிப்போனது. இதில் கிராமத்தில் இருந்த குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவரும் சேறு சகதிக்குள் சிக்கி கொண்டனர்.

மண் தோண்டும் நவீன எந்திரங்களுடன் 1000 மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர்.

இதில் இறந்துபோன 42 பேரின் உடல்களை இதுவிரையில் மீட்புப்படையினர் வெளியே எடுத்தனர், இங்கு மேலும் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மேலும் 40-க்கும் மேற்பட்டோர் இந்த சகதிக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இனிவரும் வாரங்களில் மேலும் கடுமையான மழையும் பனிப்பொழிவும் இருக்கும் எனவும் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com