சிறீதரன் எம்.பி யின் கிளிநொச்சி அலுவலகத்திலிருந்து சீ-4 ரக வெடி மருந்தும் ஆபாச சீடிக்களும் (Blue CD) மீட்பு+
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்திலிருந்து பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரினால் சீ-4 வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சுமார் 500 கிராம் சீ-4 வெடி மருந்தே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகப் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது அலுவகத்திலிருந்து ஆபாச சீடிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக வட பகுதியில் கலாச்சார சீரழிவுகள் தொடர்பில் பேசப்பட்டு வருகின்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து இச் சீடிக்கள் மீட்கப்பட்டமை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இது தொடர்பில் து பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment