ஜ.நா மனித உரிமை அமர்வுக்கு முன் ஆப்பு வைக்கிறது சனல்-4 இலங்கைக்கு எதிராக மேலும் 2 காணெளிகள்
நாட்டிலிருந்து தப்பிச் சென்ற எட்டு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இதற்கான சாட்சியங்களை அடிப்படையாக வைத்தது பிரிட்டனின் சனல்-4 ஊடகம் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னர் இலங்கைக்கு எதிராக மேலும் இரண்டு காணொளிகளை தயாரித்து வருவதாக திவயின வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியான செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாக இந்த இரண்டு காணொளிகளையும் தயாரிக்க சனல்-4 ஊடகம் முயற்சித்து வருகிறது.
தமிழ் அருட் சகோதரி, வன்னி ஊடகவியலாளர், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர், விடுதலைப் புலிகளின் வர்த்தக நிலைய உரிமையாளர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட எட்டு பேர் இவ்வாறு இலங்கைக்கு எதிராக சாட்சியங்களை வழங்க தயாராகி வருகின்றனர்.
இலங்கையில் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக நிரூபிக்கும் நோக்கில் இந்த இரண்டு காணொளிகளும் தயாரிக்கப்பட உள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சர்வதேச தொலைபேசி வலையமைப்பு ஒன்றை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளனர்.
இந்த வலையமைப்பு அமெரிக்காவிலிருந்து இயங்க உள்ளது வடக்கு கிழக்கில் வாழும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை திரட்டும் நோக்கில் இந்த விசேட தொலைபேசி வலையமைப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த சர்வதேச தொலைபேசி வலையமைப்பின் இலக்கங்களையும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என திவயின மேலும் தெரிவித்துள்ளது.
1 comments :
What kind of publicity channel 4 had given on behalf of julian Assange Wikileaks administrator who is spending his 4th month inside as a prisoner atEquader Embassy in London.
What happend to Iran's press TV will they tell something about the fate of Press TV.
Post a Comment