Wednesday, January 9, 2013

3ஜி வாய்ஸ் மாடல் டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகம்

கோபியான் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ஒரு 3ஜி வாய்ஸ் மாடல் டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு எம்டேப் நியோ 2 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்கும் இந்த டேப்லெட் விரைவில் ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தைப் பெறும் என்று தெரிகிறது.

இந்த எம்டேப் டெப்லெட் பல நல்ல தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. அதாவது 365 கிராம் எடை கொண்ட இந்த டேப்லெட் 800 ஒ 480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. கருப்பு நிறத்தில் வந்தாலும் களையாக இருக்கிறது. மேலும் இது மல்டி டச் கப்பாசிட்டிவ் வசதி கொண்டது.

இந்த எம்டேப் டேப்லெட் கூகுள் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குவதால் இது ஆன்ட்ராய்டு வாடிக்கையாளர்களை எளிதில் கவர்ந்துவிடும். மேலும் இது 1.2 ஜிஹெர்ட்ஸ் கோர்ட்டெக்ஸ் எ8 டூவல் கோர் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இந்த டேப்லெட்டின் இயங்கு வேகமும்இ செயல்திறனும் தாறுமாறாக இருக்கும். மேலும் சாம்சங்கின் சிப்செட் கொண்டிருப்பதால் வீடியோ கேம் போன்றவற்றை மிக அருமையாக விளையாட முடியும்.

கேமராவைப் பொறுத்தவரை இந்த டேப்லெட் 0.3 மெகா பிக்சல் முகப்பு கேமராவையும்இ 2 மெகா பிக்சல் பின்பக்க கேமராவையும் கொண்டிருக்கிறது. அதனால் படம் எடுப்பதுஇ வீடியோ எடுப்பது மற்றும் வீடியோ உரையாடலில் பங்கேற்பது போன்ற காரியங்களை இந்த டேப்லெட் மிக அழகாகச் செய்யும்.

இந்த கேமரா 512 எம்பி ரேமையும் 8ஜிபி இன்டர்னல் சேமிப்பையும் கொண்டுள்ளது. எஸ்டி கார்டு மூலம் இதன் சேமிப்பை 32 ஜிபி வரை அதிகரிக்க முடியும். இணைப்பு வசதிகளைப் பொறுத்தவரை இந்த டேப்லெட் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் ஆகியவற்றை சப்போர்ட் செய்வதில்லை. ஆனால் 3ஜிஇ வைபைஇ ப்ளூடூத்இ யுஎஸ்பிஇ மினி யுஎஸ்பிஇ மற்றும் 10.2 ப்ளாஷ் ப்ரவ்சர் போன்றவற்றை சப்போர்ட் செய்கிறது.

மேலும் இந்த எம்டேப் டேப்லெட் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்கை சப்போர்ட் செய்கிறது. அதுபோல் எல்லாவிதமான ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டுகளையும் சப்போர்ட் செய்கிறது. இதில் 3டி கேம்களை அனுபவித்து விளையாடலாம். மேலும் இந்த டேப்லெட் 3400 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட லயன் பேட்டரியைக் கொண்டிருப்பதால் இது நீண்ட நேர இயங்கு நேரத்தைக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த எம்டேப் டேப்லெட்டின் விலை ரூ.15000 ஆகும். மேலும் இது ஒரு வருட உத்திரவாதமும் தருகிறது.

No comments:

Post a Comment