Wednesday, January 9, 2013

நிலவில் 3 பெரிய பள்ளங்கள், வால்நட்சத்திரங்களின் தாக்குதல்? - படங்கள் இணைப்பு

பூமியின் துணைகிரகமான நிலவில் 3 பெரிய பள்ளங்கள் இருப்பது தற்போது நாசாவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெரிக்க விண்வெளி மையமான நாசா தனது விண்கலத்தின் உதவியுடன் எடுத்துள்ள புகைப்படத்தில் நிலவில் 3 பெரிய பள்ளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில்,

இந்த பள்ளங்கள் எரிகல் மற்றும் வால் நட்சத்திரம் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கலாம். இந்த பள்ளங்களில் தென்மேற்கில் அமைந்த பள்ளம் மிகவும் பெரியதாக உள்ளது, இதன் விட்டம் 180 மீற்றர் ஆகும்.

இதற்கடுத்து மத்தியில் அமைந்த பள்ளம் 150 மீற்றரும், வடகிழக்கு பகுதியில் அமைந்த பள்ளம் 125 மீற்றரும் என்ற அளவில் உள்ளது. இந்த பள்ளங்கள் அடுத்தடுத்த சில நிமிடங்களில் ஏற்பட்டிருக்ககூடும் என்று தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment