2012ஆம் ஆண்டு சீனாவிலிருந்து 35,000க்கும் மேற்பட்ட உல்லாச பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்ததுடன் இந்த வருடம் இதனை மேலும் அதிகரிக்க பல திட்டங்களை புதிதாக கொண்டு வர உள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த வருடம் இலங்கையில் உள்ள உல்லாசத்துறை மையங்களை மேலும் ஊக்குவிக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் சீன குடிமக்கள் மத்தியில் சாதகமான கருத்துக்கள் கட்டியெழுப்பப்பட்டுள்ளதால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் சீன மக்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என இலங்கை சுற்றுலாத்துறை எதிர்பார்த்திருப்பதாக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
No comments:
Post a Comment