33 ஆயிரம் வோல்ட் மின்கம்பத்துடன் மோதியது கடற் படையினரும் பயணித்த பஸ் உயிர்சேதம் இல்லை!
18 கடற்படையினரை ஏற்றிகொண்டு பயணித்த பஸ் 33 ஆயிரம் வோல்ட் மின்கம்பத்தில் மோதி இன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளான போதும் தெய்வாதீனமாக 18 கடற்படையினரும் எந்தவிதமான உயிரிழப்பின்றி உயிர்தப்பியுள்ளனர். எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து குறித்த பஸ்ஸின் மீது விழுந்த போதிலும் உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை.
கலபெத்தாவே எனுமிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது பானமையில் இருந்து சியம்பலாண்டு வரையிலேயே கடற்படையினரை ஏற்றிக்கொண்டு இந்த பஸ் புறப்பட்டுச்சென்றது.
சம்பவத்தையடுத்து அரச சொத்துக்கு சேதம்விளைவித்தார். என்ற குற்றச்சாட்டில் குறித்த பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment