கடந்த வருடத்தில் மட்டும் விசர் நாய்க்கடி காரணமாக 6 பாடசாலை மாணவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு காரணம் தாம் கொணட்டுவந்த உணவு வகைகளில் மீதமாகுபவற்றை நாய்களுக்கு வழங்குவதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் குருநாகல் மாவட்ட கல்விப் பணிப்பாளர் ஜே.எம்.சூரிய பண்டார கூறுகிறார்.
இந்த நிலை அதிக அளவில் காணப்படுவது குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் என சுட்டிக்காட்டியதுடன் விசர் நாய்க்கடி தொடர்பாக ஏற்படும் நீர் ஒவ்வாமை நோய் மற்றும் அது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளுக்காக வருடாந்தம் 100 கோடி ரூபா நிதி அரசாங்கத்தினால் செல விடப்படுவதாகவும் தெரிவிதார்.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார தரப்புடன் இணைந்து கல்வி அமைச்சு நாடளாவிய ரீதியாக மாணவர்களுக்கு இடையே விசர் நாய் கடி மற்றும் நீர் ஒவ்வாமை நோய் குறித்து புரிந்துணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதுவரை நாடளாவிய ரீதியாக இப்படியான பன்னீராயிரம் புரிந்துணர்வு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போது உரிமையாளர் அற்ற நாய்கள் அதிகமாக பாடசாலைகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பிரதேசங்களில் காணப்படுவதாக சுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.பே
No comments:
Post a Comment