பந்தயத்தில் 300 கோடி ரூபா சொத்து இளந்தவர்கள்
ஆந்திராவில் ஆண்டுதோறும் மகரசங்கராந்தி (பொங்கல்) விழா கோலாகலமாக கொண் டாடப்படுகிறது. போகிப் பண்டிகை முதல் மாட்டுப் பொங்கல் வரையான 3 நாட்களில் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேவல் சண்டை நடத்தப்படுவருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த சேவல் சண்டையில் ரூ. 300 கோடி அளவுக்கு பந்தயம் கட்டப்பட்டுள்ளது.
இந்திய தெலுங்கு தேசம் எம். எல். ஏ.க்கள் பிரபாகர், ஆனந்த்பாபு, ராமசிருஷ்ணா ஆகியோரும் இலட்சக்கணக்கில் பந்தயம் கட்டினர். பலர் தங்களது வீடு நிலங்களையும் பந்தயமாக வைத்தனர்.
பந்தயத்தில் தோல்வி அடைந்ததால் கிருஷ்ணய்யா, கோடீஸ்வரராவ் உட்பட 10 பேர் தங்களது வீடுகளை இழந்தனர்.
விஜயவாடாவைச் சேர்ந்த ராபர்ட் கூறும்போது ஆந்திராவில் மகர சங்கராந்தியின்போது நடைபெறும் சேவல் சண்டையை தடை செய்ய வேண்டும். சேவல்கள் மீது வீடு, நிலங்கள்கூட பந்தயமாக வைக்கப்படுகிறது. இந்த சேவல் பந்தயத்தால் ஏராளமான பேர் தங்களது பணம் மற்றும் சொத்துக்களை இழந்து வருகிறார்கள் பொலிஸார் சேவல் சண்டை நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment