தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் மூன்றாவது முறையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது கூட்டமைப்பை பெரும் நெருக்கடிக்குள்ளாகத் தள்ளியுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு செலவுத் திட்டமானது ஏற்கனவே இரண்டு முறை கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தோற்கடிக்க்பட்டது.
நகர சபையின் உள்ளே தலைவர் வல்வை. அனந்தராஜ் இற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதங்களும் சண்டைகளும் அடிக்கடி இடம்பெற்று வருகின்றது.
இதன் உச்சக்கட்டமாக அண்மையில் உபதலைவருக்கு எதிராக தலைவரே வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடென்று மேற்கொண்டார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மீண்டும் நகர சபையின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
இதன்போது நகர சபையின் தலைவர் மட்டும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். ஏனைய ஆறு பேர் எதிராக வாக்களித்தனர். இருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் என்ன? செய்வதென்று தெரியாமல் திணறிவருகின்றார் நகர பிதா!!!.
No comments:
Post a Comment