ரிசானாவிற்கு போலி ஆவணங்கள் தயாரித்த இலங்கையருக்கு 2 வருட ஒத்தி வைத்த கடூழியச்சிறைத் தண்டனை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கின் போலி பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை தயாரிக்க உதவியதாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபருக்கு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்த சிறையும் தண்டமும் விதித்தது.ரிசானாவின் மரணத்தின் பின்னர் குறித்த சந்தேக நபரான தம்பிலெப்பை அப்துல் சலாம், தலைமறைவாகி இருந்தார் இவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ஏனைய இரண்டு சந்தேகநபர்களுடனும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
ரிசானா நபீக் வெளிநாட்டு அனுப்பக்கூடிய வயதுடன் கடவுச்சீட்டு பெறுவதற்கு போலியான பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை தயாரித்த சந்தேகநபர்களான தம்பிலெப்பை அப்துல் சலாம், பக்கீர் மொஹம்மட் வஜுர்தீன் மற்றும் சா{ஹல் ஹமீட் அப்துல் லத்தீப் ஆகியோருக்கு எதிராக மேல் நீமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தம்பிலெப்பை அப்துல் சலாம் தான் குற்றமற்றவர் என நீதிமன்றில் கூறியபோதும் ஏனைய இருவரும் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
தலைமறைவாகிய தம்பிலெப்பை அப்துல் சலாமை புலனாய்வு பொலிஸார் பேருவளையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவரை வழக்கு விசாரணைகள் முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
விசாரணையின் பின் இன்று செவ்வாய்க்கிழமை இவருக்கு ஐந்து வருட ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5,000 ரூபா தண்ட பணமும் விதிக்கப்பட்டது.
.
0 comments :
Post a Comment