அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற படகு விபத்து இலங்கையர் இருவர் பலி 20 மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர்
அவுஸ்ரேலியா நோக்கி புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற படகொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் இலங்கையில் இருவர் பலியாகியுள்ளதோடு 20 பேர் இந்தோனிசய மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். குறித்த படகு யாவாக் கரைக்கு அப்பால் ஒரு பாறையில் மோதியே இரண்டாக பிளவுப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இலங்கையர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணமடைந்ததாகவும் ஒருவர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எஞ்சிய 20 பேரும் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு தற்போது இந்தோனேஷிய தீவான நுஸா கம்பன்கனில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் நான்கு வயது சிறுவனும் 10 வயது பெண்பிள்ளை ஒன்றும் அடங்குகின்றனர்.
0 comments :
Post a Comment