2014 இல் ஐதேக ஆட்சி பீடமேறும்! – இத்தாலியில் எதிர்க்கட்சித் தலைவர்
(கலைமகன் பைரூஸ்) எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இத்தாலிச் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, ரோமில் உள்ள ஐதேக ஆதரவாளர்களின் கூட்டமொன்றுக்குச் சமுகமளித்தார். அங்கு அவர் இவ்வாண்டு ஐதேக முன்னெடுக்கவுள்ள பல திட்டங்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்தார். முதல் ஆறு மாதகாலப் பிரிவில் நாடெங்கிலும் ஐதேக கிளைகளைகளையும், பிரதான காரியாலயங்களையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும், தற்போதுள்ள பிரதான காரியாலயங்களை மீண்டும் உயிர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், முன்னர் அவற்றை செய்ய முயற்சித்தபோதும் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதத்தின்பின்னர் மக்களுக்கு வாழ்க்கைச் செலவு பற்றித் தெளிவாகத் தெரிவதாகவும், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கேற்ப மக்களால் ஈடுகொடுக்க முடியாதுள்ளதாகவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாகவும் நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும் தனித்துவத்தையும் பாதுகாக்குமாறு அரசுக்கு எதிராக பலமான எதிர்ப்பார்ப்பாட்டத்தை நாடுமுழுதும் நடாத்தவுள்ளதாகவும், அதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2014 இல் தேர்தல் ஒன்று நடாத்தப்படவுள்ளது. அதில் நிச்சயம் ஐதேக ஆட்சி பீடத்தில் அமர முடியும் என்றும் குறிப்பிட்ட அவர், இவ்வாண்டு ரோமில் அதற்கான முன்னெடுப்புக்களை ஆயத்தப்படுத்தி ஐதேக தலைமை அலுவலகத்திற்குச் செல்லவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
இத்தாலி சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் இன்று நாடு திரும்புகின்றனர்.
0 comments :
Post a Comment