2 கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஈரானியர் கைது.
ஈரான் பிரஜையொருவர் தனது பயணப்பையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து எடுத்து வந்த 2 கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான போதை வஸ்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது.
2 கிலோ எடையுடைய குறித்த போதை பொருள் இலங்கையில் விநியோகிப்பதற்காக எடுத்துவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த நபரின் பயணப்பை போதை பொருள் கடத்தலுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானதோர் முறைமையில் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டமை இது வே முதல்தடவை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment