சிறிதரனின் அலுவலகத்தில் இன்று 2வது தடவையாகவும் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் 3 மணி நேரச்சோதனை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறிதரனின் அலுவலகத்தில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு சீ-4 வெடிமருந்து ஆபாசப்படங்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கைது செய்யப்பட்டார்.
இதன்பின்னர் சிறிதரனின் பிரத்தியேகச் செயலாளர் பொன் காந்தன் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையிலேயே இத்தேடுதல் வேட்டையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இத்தேடுதலானது சுமார் 3 மணித்தியாலயங்கள் நீடித்துள்ளது..
பொன்காந்தனிடம் விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவர் வழங்கியிருக்கக்கூடிய மேலதிக தகவல்களின் அடிப்படையில் இத்தேடுதல் மேற்கொண்டிருக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment