அரசியலமைப்பு திருத்துவது தொடர்பில் கலைந்துரையாடப்படுகிறது 19 வது அரசியலைப்பிற்கு தயாராகிறது அரசாங்கம் ?
அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்பை திருத்தம் செய்யாது. திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டால் அது 19ஆவது திருத்தமாகவே அமையும் நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் வகையிலேயே எனி அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமே தவிர அரசியலமைப்பு மாற்றப்படாது. இது தொடர்பில் அரசியலமைப்பு சட்டம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களுடன் கலந்துரையாடப்படுகின்றதென அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டு நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெலஇ அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரே கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இதன்போது ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல பதிலளிக்கையில்இ
அரசியலமைப்பை திருத்த வேண்டும் என்று நாட்டில் பரவலாக பேசப்படுகின்றது. அப்படியான திருத்தம் ஒன்று அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டால் அது 19ஆவது திருத்தமாகவே இருக்கும். என்றார்.
அரசியலைமைப்பில் என்னென்ன திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இதுவரையிலும் அரசாங்கம் இனங்காணவில்லை. 13 (பிளஸ்) என்றும் 13 (மைனஸ்) என்றும் பரவலாக பேசப்படுகின்றது.
நாடாளுமன்றத்தின் பலத்தை இன்னும் பலப்படுத்தும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். என்றார்.
0 comments :
Post a Comment