யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட இளைஞர் 19 நாட்களின் பின் விடுதலை
யாழ்.வட்டுக்கோட்டையில் வெள்ளை வானில் வைத்தது கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் 19 நாட்களின் பின்னர் யாழ்.செம்மணிப் பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடத்தப்பட்டது தற்போது விடுவிக்கப்பட்டது தொடர்பில் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழவில் நேற்று வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இதில் வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த யோகேஸ்வரன் அருள்ஜீவன் வயது 29 என்றவரே இவ்வாறு கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர்.
கடத்தியவர்கள் யார்? என்னத்திற்காக கடத்தினார்கள் என்பது பற்றி தனக்கு தெரியாதென்றும் அவர்களை தன்னைத் துன்புறுத்தவில்லையென்றும் அவர்கள் யார்? என்று தெரியாதென்றும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment