வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட 18 வயது இளம் பெண்
யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் வறுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் 18 வயது இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து தகப்பனார், வேலைக்கு சென்றுள்ளார். சகோதரனும் வேலைக்கு சென்றுள்ளார். தாயார் அருகிலுள்ள கடைக்கு சென்ற சமயம் குறித்த பெண் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 comments :
Really a shame to the society.
Post a Comment