சம்மாந்துறையில் இன்று (18.01.2013) வித்தியாரம்ப விழா
தேசிய ரீதியாக கொண்டாப்படும் இந் நிகழ்வு சம்மாந்துறை வலயத்தில் இன்று 18.01.2013 கமு/சது/முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இம்முறை சம்மாந்துறை வரலாற்றிலிலும் இப்பாடசாலையின் வரலாற்றிலும் அதிகளவான மாணவர்களை குறிப்பாக 200 மாணவர்களை பல விண்ணப்பதாரிகளின் போட்டிக்கு மத்தியில் உள்வாங்கி இந்த ஆண்டில் வலயத்தில் சாதனை படைத்துள்ளது என்றால் யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இந்நிகழ்வு காலை 9.00 மணிக்கு பாடசாலை அதிபர் ரீ.எம். தௌபீக் தலைமையில் நடைபெற்றது. சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், வலயக்கல்வி அலுவலத்தின் சமாதான கல்விக்கான இணைப்பாளர் எம். அச்சிமுகம்மட், ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி, கே. அகமட் மற்றும் பாடசாலையின் அபிவிருத்திக்குழு செயலாளர், ஏ. அமீர் அலி , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் புதிய மாணவர்களின் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும், இந்நிகழ்வு இப்பாடசாலையில் ஆசிரியரான ஏ.எம். தாஹாநழீம் அவர்களின் ஒழுங்கிணைப்பின் ஊடாக வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
தகவல் – ஏ.எம்.தாஹாநழீம்
0 comments :
Post a Comment